பிரித்தானிய அரச குடும்பத்தின் கடுமையான நெறிமுறை ஒன்றை மீறிய ஹரி – மேகன் தம்பதி
நைஜீரியாவில் இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு விறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், உள்ளூர் மக்களிடமிருந்து பல பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளன.
அரச குடும்பத்து உறுப்பினர்கள்
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் Invictus போட்டிகளை பிரபலப்படுத்தும் வகையில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் விஜயம் செய்துள்ளனர். தொடர்புடைய பயணத்தின் போது, நிதி திரட்டும் நிகழ்வுகளை முன்னெடுத்துள்ளதுடன் பல உருக்கமான உரைகளையும் நிகழ்த்தியுள்ளனர்.
மட்டுமின்றி, பாரம்பரிய உடைகள், நகைகள், ஓவியங்கள் என பரிசுகளை அங்குள்ள மக்கள் அளித்துள்ளனர். ஆனால் அரச குடும்பத்து உறுப்பினர்கள் பரிசுகளை பெற்றுக்கொள்வது நெறிமுறைகளை மீறும் செயல் என கூறப்படுகிறது.
அரச குடும்பத்தினர் எந்த வகையிலும் பரிசுகளை பெற்றுக்கொள்ள கூடாது என்பதை கடுமையான விதியாகவே பின்பற்றி வருகின்றனர். பரிசுகளை பெற்றுக்கொள்வதால், பரிசளிப்பவர்களுக்கு ஆதாயம் பெற உதவுவதாகவே கருதப்படுகிறது.
சந்திக்க வாய்ப்பில்லை
இருப்பினும், பூக்கள், உணவு அல்லது நூல்களை பரிசாக பெற்றுக்கொள்ளலாம். அத்துடன் 150 பவுண்டுகளுக்கும் குறைவான மதிப்பில் பரிசுகளை பெற்றுக்கொள்ளலாம்.
ஹரி – மேகன் தம்பதி 2020 முதலே அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அந்தஸ்தை இழந்துள்ளதால், அந்த நெறிமுறை இவர்களுக்கு பொருந்தாது என்றே கூறப்படுகிறது.
இந்த நிலையில், நைஜீரிய பயணம் முடிவடைந்துள்ளதால், அமெரிக்கா திரும்பும் வழியில் அவர்கள் லண்டனில் சில மணி நேரம் தங்கலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்கள் அரச குடும்பத்து உறுப்பினர்கள் எவரையும் சந்திக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.