;
Athirady Tamil News

சர்வதேச மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ள ஒரு செய்தி: பதற்றம் நீங்கியது

0

சர்வதேச மாணவர்களுக்கு பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்த ஒரு விடயம், தற்போது அவர்களுக்கு பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கு பதற்றத்தை உருவாக்கிய விடயம்
பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவ மாணவியர், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பிரித்தானியாவில் பணி செய்யும் வகையில், பட்டதாரி விசா (graduate visa) என்னும் விசா வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், அந்த விசாவை மதிப்பாய்வு செய்து, அதன் முடிவுகளை இன்று வெளியிட இருப்பதாக பிரித்தானிய அரசு அறிவித்திருந்தது. பட்டதாரி விசா தவறாகப் பயன்படுத்தப்படக்கூடாது என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்திருந்தார் பிரித்தானிய உள்துறைச் செயலரான ஜேம்ஸ் கிளெவர்லி.

ஏற்கனவே, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்தல் தொடரும் நிலையில், இந்த பகுப்பாய்வின் முடிவுகள் மாணவர்களுக்கு பாதகமாக வருமானால், அவர்கள் வேறு நாடுகளை நோக்கிச் சென்றுவிடுவார்கள். அதனால் பிரித்தானியாவுக்கும் இழப்பு என்று கூறியிருந்தார்கள் கல்வியாளர்கள்.

சர்வதேச மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளித்துள்ள ஒரு செய்தி
ஆனால், மதிப்பாய்வின் முடிவுகள் சர்வதேச மாணவர்களுக்கு பெருமகிழ்ச்சியை அளிப்பதாக அமைந்துள்ளன. ஆம், பட்டதாரி விசாக்கள், தவறாக பயன்படுத்தப்படவில்லை என மீளாய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளன.

ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினர், பட்டதாரி விசாக்கள், தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து கூறிவந்த நிலையில், பிரித்தானிய அரசின் புலம்பெயர்தல் ஆலோசகர்கள், பட்டதாரி விசாக்கள் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

பிரித்தானிய அரசின் புலம்பெயர்தல் ஆலோசனை கமிட்டி (The Migration Advisory Committee (MAC), சர்வதேச மாணவர்களை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வேலை செய்ய அனுமதிப்பது தொடரவேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.