;
Athirady Tamil News

உலகின் 5வது உயரமான சிகரத்தில் ஏறிய பிரான்ஸ் நாட்டவருக்கு ஏற்பட்ட துயரம்

0

நேபாளத்தில் அமைந்துள்ள உலகின் 5வது உயரமான Mount Makalu சிகரம் மீதேறிய பிரான்ஸ் நாட்டவர் மரணமடைந்துள்ளார்.

உடலை மீட்டுவரும் ஏற்பாடு
இந்த ஆண்டில் இதுவரை இரண்டாவது மரணம் இதென்று கூறுகின்றனர். அதுவும் Mount Makalu-ல் இரண்டாவதாக மரணம் நடந்துள்ளது. 60 வயதான Johnny Saliba ஞாயிறன்று 26,640 அடி உயரத்தில் இருக்கும் போது மரணமடைந்துள்ளார்.

அவர் உச்சிக்குச் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தினார் என்றும், இதனால் அவரது வழிகாட்டி அவரை கீழே கொண்டுவர முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் அவர் அங்கேயே மரணமடைந்துள்ளார். Johnny Saliba மரணமடைந்துள்ள தகவலை அவரது குடும்பத்தினருக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும், உடலை மீட்டுவரும் ஏற்பாடும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

27,838 அடியைத் தொட வேண்டும் என்ற முனைப்புடன் கிளம்பிய குழுவில் அவரும் இருந்துள்ளார். கடந்த வாரம் 53 வயதான நேபாள வழிகாட்டி ஒருவர் Makalu சிகர உச்சிக்கு சென்ற பின்னர், கீழிறங்கும் போது மரணமடைந்துள்ளார்.

எவரெஸ்ட் சிகரத்திற்கு 414 அனுமதி
ஏற்கனவே Makalu சிகரத்தின் மீதேற வெளிநாட்டவர்கள் 59 பேர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் கட்டணமாக 1,800 டொலர் வசூலிக்கப்படுகிறது. ஆனால் எவரெஸ்ட் சிகரத்திற்கு 11,000 டொலர் செலவாகும் என்றே கூறப்படுகிறது.

இந்த நிலையில், டசின் கணக்கானோர் Makalu சிகரத்தின் உச்சிக்கு சென்று திரும்பியுள்ளனர். மிக உயரமான உலகின் 14 சிகரங்களில் 8 சிகரங்கள் நேபாளத்தில் அமைந்துள்ளது.

இதனாலையே நூற்றுக்கணக்கான ஆர்வலர்கள் நேபாளம் நோக்கி படையெடுக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 900 அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எவரெஸ்ட் சிகரத்திற்கு 414 அனுமதி வழங்கியுள்ளனர். இதனால் 5 மில்லியன் டொலருக்கும் அதிகமாக ராயல்டியை நேபாளம் ஈட்டுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.