;
Athirady Tamil News

பிரான்சில் அனைத்து வயதினருக்கும் நொய்த்தொற்று ஒன்று தொடர்பில் ஒரு எச்சரிக்கை

0

பிரான்சில் கக்குவான் இருமல் என்னும் தொற்று பரவிவருவதைத் தொடர்ந்து, அனைத்து வயதினருக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபத்தான இருமல்
சாதாரண ஜலதோஷம் போல் துவங்கும் இந்த தொற்று, பின்னர் கடுமையான இருமலாக மாறும். அது ஆபத்தானதாகும், ஏனென்றால், குழந்தைகளுக்கும், எளிதில் பாதிக்கப்படும் நிலையிலிருப்பவர்களுக்கும் அது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடக்கூடும்.

பிரான்சில் இந்த கக்குவான் இருமல் என்னும் whooping cough தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. அனைத்து வயதினரும் இந்த இருமலால் பாதிக்கப்பட்டுவருவதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எளிதில் பாதிக்கப்படும் அபாயத்திலிருப்போர், தடுப்பூசி முறையாக போட்டிருப்பதை உறுதி செய்துகொள்ளுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Bordetella pertussis அல்லது Bordetella parapertussis என்னும் கிருமிகளால் உருவாகும் இந்த தொற்றின் மருத்துவப் பெயர் pertussis என்பதாகும். அது பாக்டீரியாவால் உருவாகும் ஒரு சுவாசப் பாதை தொற்று ஆகும். பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போது, அவர்களிடமிருந்து இந்த தொற்று எளிதில் காற்று மூலம் பரவக்கூடியதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.