;
Athirady Tamil News

ஜேர்மனியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்குச் செல்லும் ரோபோ

0

ஜேர்மனியில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள ஒரு சிறுவனுக்கு பதிலாக ரோபோ ஒன்று பள்ளிக்குச் சென்று பாடம் படிக்கிறது.

சிறுவனுக்கு பதிலாக பள்ளிக்குச் செல்லும் ரோபோ
ஜேர்மனியில், நுரையீரல் பாதிப்பு காரணமாக Linus என்னும் சிறுவனால் பள்ளிக்குச் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. அவனால் மெதுவக நடக்க முடிந்தாலும், படி ஏறவோ, ஓடவோ முடியாது.

ஆகவே, அவன் வீட்டிலிருந்தவண்ணமே படிக்கும் நிலை ஏற்பட்டது. அவனுக்கு உதவுவதற்காக ஒரு ரோபோ உருவாக்கப்பட்டது. பள்ளியில் அவனது இடத்தில் அந்த ரோபோ உட்கார்ந்திருக்கும். ஆசிரியர் பாடம் எடுப்பதை Linus வீட்டிலிருந்தவண்ணம் தனது கணினி மூலம் கவனித்துக்கொண்டிருப்பான். அவனுக்கு ஏதாவது சந்தேகம் என்றால், அவன் ஒரு பொத்தானை அழுத்தினால், அந்த ரோபோவில் விளக்கு எரியும். அதை வைத்து அவன் ஏதோ கேட்க விரும்புகிறான் என்பதை அறிந்துகொள்ளும் ஆசிரியர், மற்ற மாணவர்களிடம் பேசுவதுபோலவே அந்த ரோபோவிடம் வந்து பேசுவார்.

ஆக, Linusக்கு தான் பள்ளியிலிருப்பது போன்ற உணர்வே ஏற்படும். போதாதற்கு, அவனது நண்பர்கள் சாப்பிடச் சென்றாலும், அந்த ரோபோவை துகிக்கொண்டே செல்வதால், அவனுக்கு தன் நண்பர்களுடன் இருக்கும் உணர்வும் ஏற்படுவதால், அவன் பள்ளியையும் நண்பர்களையும் மிஸ் பண்ணுவதில்லை.

Linusஐப் போலவே, ரோபோ உதவியுடன் கல்வி கற்கும் ஒரு மாணவனைக் காட்டும் வீடியோ ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.