ஆஹுங்கல்லவில் நபரொருவர் சுட்டுகொலை… ஒருவரை கைது செய்த பொலிஸார்!
அஹுங்கல்ல பகுதியில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்திற்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்கொட, துவமோதர பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட அதிரடிப் பிரிவின் அதிகாரிகள் குழு சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபர் கடந்த 8 ஆம் திகதி அஹுங்கல்ல பிரதேசத்தில் நபர் ஒருவரைக் கொல்ல துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய ‘அதரே’ என்ற புனைப்பெயர் கொண்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது நடவடிக்கையின் போது, அவரிடம் இருந்த 1,150 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கையடக்கதொலைபேசியை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கொஸ்கொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.