விஞ்ஞான பாட இரு வினாக்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் (GCE OL exam) விஞ்ஞான பாட வினாத்தாளின் 9 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இரண்டு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்று(15) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விஞ்ஞான பாட வினாத்தாள் தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டிருந்தது.
கல்வி அமைச்சர்
மேலும், விஞ்ஞான வினாத்தாளின் வினாக்கள் பாடத்திட்டத்துக்கு புறம்பான முறையில் தயாரிக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, எந்தவொரு மாணவருக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.