அணு ஆயுதப்போர் வெடித்தால் இந்த இரண்டு நாடுகள் மட்டும் தப்புமாம்: அவை எந்த நாடுகள் தெரியுமா?
ரஷ்யா உக்ரைன், இஸ்ரேல் காசா, வடகொரியா தென்கொரியா என பல நாடுகளுக்கிடையில் மோதல்கள் காணப்படும் நிலையில், எப்போது, யார் அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவார் என்ற பயம் உலகில் பலருக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.
5 பில்லியன் மக்கள் மடிவார்கள்
அப்படி ஒருவேளை அணு ஆயுதப்போர் வெடித்தால் என்ன ஆகும், எத்தனை பேர் பலியாவார்கள் என்பது போன்ற விடயங்களை ஆய்வு செய்துவரும் பெண்ணொருவர், இரண்டு நாடுகளில் வாழ்பவர்கள் மட்டும் போருக்குப் பின் உயிர்வாழமுடியும் என்று கூறியுள்ளார்.
ஆய்வாளரும் ஊடகவியலாளருமான ஆனி ஜாக்கப்சன் (Annie Jacobsen) என்பவர், அணு ஆயுதப்போர் வெடித்தால், அடுத்த 72 மணி நேரத்துக்குள் சுமார் 5 பில்லியன் மக்கள் மடிவார்கள் என்றும், மூன்று மில்லியன்பேர் உயிர் பிழைத்தாலும், அவர்களுக்கு வாழ்க்கை மிகவும் கடினமானதாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இந்த இரண்டு நாடுகள் மட்டும் தப்புமாம்
அணு ஆயுதம் வீச்சப்பட்டபின், பெரும்பாலான நாடுகள் பனி சூழ்ந்து காணப்படுவதால், அங்கு விவசாயம் செய்வது இயலாததாகிவிடும் என்று கூறும் ஆனி, விவசாயம் பொய்த்துப்போவதால் மக்கள் மடிவார்கள் என்கிறார்.
கதிர் வீச்சு அபாயம் காரணமாக பதுங்கு குழிகளுக்குள் மறைந்து வாழ்பவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்றாலும், அவர்களும் ஒரு கட்டத்தில் வெளியே வந்துதானே ஆகவேண்டும் என்று கேட்கும் ஆனி, அவர்கள் வெளியே வந்தபின், கிடைக்கும் கொஞ்சம் உணவுப்பொருட்களுக்காக அடித்துக்கொள்ளும் நிலைதான் ஏற்படும் என்கிறார்.
என்றாலும், அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே அணு ஆயுதப்போருக்குப் பின்னும் விவசாயம் செய்ய இயலும் என்று, பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் நிபுணரான பேராசிரியர் Brian Toon என்பவர் தன்னிடம் கூறியதாகத் தெரிவிக்கிறார் ஆனி.