ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு: ஐரோப்பிய தலைவர்கள் கண்டனம்
ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ( Robert Fico) புதன்கிழமை நடந்த சந்தேகத்திற்கிடமான படுகொலை முயற்சியில் பல முறை துப்பாக்கியால் சூடப்பட்டுள்ளார்.
தற்போது அவர் படுகாயமடைந்து பான்ஸ்கா பைஸ்ட்ரிகா (Banska Bystrica) வில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
59 வயதான அரசியல்வாதி ஹேண்ட்லோவா (Handlova) நகரில் நடந்த அரசாங்க கூட்டத்தை தொடர்ந்து தாக்கப்பட்டார்.
இதில் 71 வயதான சந்தேக நபர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டார். உள்ளூர் ஊடகங்கள் ராபர்ட் ஃபிகோ வயிற்றில் சுடப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.
பிரதமரின் உடல்நிலையை “அடுத்த சில மணி நேரங்கள் தீர்மானிக்கும்” என்று ஃபிகோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு செய்தி தெரிவிக்கிறது.
ஐரோப்பா முழுவதும் தலைவர்கள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளனர்.
ஐரோப்பிய கமிஷன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன்(Ursula von der Leyen) இதை “கொடிய தாக்குதல்” என்று அழைத்தார், மற்ற தலைவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தி பிரதமருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டுக்கு பெயர் பெற்ற சர்ச்சைக்குரிய நபரான ஃபிகோ, ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.