பாலஸ்தீனிய நபரொருவருக்கு ஜேர்மனியில் ஆயுள் தண்டனை
ஜேர்மனியில், பாலஸ்தீனியர் ஒருவர் தொடரூந்தில் நடத்திய கத்திக்குத்து தாக்குதலின் பிரதான சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு,ஜனவரி மாதம் 25ஆம் திகதி, ஹாம்பர்கிலிருந்து Kiel நோக்கிச் சென்றுகொண்டிருந்த ஒரு தொடருந்தில் , இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில், 17 வயது இளம்பெண் ஒருவரும், அவரது காதலரான 19 வயது இளைஞர் ஒருவரும் உயிரிழந்தந்தனர்.
தாக்குதல்தாரி கைது
மேலும், நான்கு பேர் காயமடைந்தனர்.
இதன்போது சக பயணிகள் அவர் மீது பாய்ந்து அவரை மடக்கிப் பிடித்துவைத்துக்கொள்ள, உடனடியாக தொடருந்து நிறுத்தப்பட, Brokstedt பொலிஸார் தாக்குதல்தாரியைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.