;
Athirady Tamil News

விஜயதாசவிற்கு எதிரான தடை உத்தரவு கோரிக்கை நீதிமன்றால் நிராகரிப்பு

0

விஜயதாச ராஜபக்ச (Wijeyadasa Rajapakshe) மற்றும் கீர்த்தி உடவத்த (Keerthi Udawatta) ஆகியோரின் நியமனங்களுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு முன்வைத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

கொழும்பு (Colombo) மாவட்ட நீதிமன்றம் இன்று (16) குறித்த தீர்ப்பை வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக விஜயதாச ராஜபக்சவையும், பதில் செயலாளராக கீர்த்தி உடவத்தவையும் நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.

துமிந்த திசாநாயக்க முறைப்பாடு
இதற்கமைய அந்தக் கட்சியின் அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்குமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்கவினால் (Duminda Dissanayake) முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் முன்வைக்கப்பட்ட குறித்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

எவ்வாறாயினும், இந்த முறைப்பாட்டைத் திருத்தவும், உரிய தடை உத்தரவுக்கான சமர்ப்பணங்களை உறுதிப்படுத்தவும் வாதிக்கு அவகாசம் உள்ளதாக நீதிபதி சந்துன் விதான தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.