தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு
யாழ்ப்பாண மாவட்ட கோப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது 15/05/2024 (புதன் கிழமை) இடம்பெற்றது.
இதில் வளவாளராக அரச மூலிகை தோட்டம் மற்றும் சித்த மத்திய மருந்தகத்தின் மருத்துவப் பொறுப்பதிகாரி சிவகுலேந்திரா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
இந்த நிகழ்வில் தொற்றா நோய் என்றால் என்ன? அதனுடைய வகைகள் என்ன?தொற்றா நோய் வராமல் தடுக்கும் முறைகள் என்ன?தொற்றா நோயினை கட்டுப்படுத்தக்கூடிய வழிமுறைகள் என்ன?பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சி முறைகளை எவ்வாறு அன்றாட வாழ்க்கையில் பழக்கப்படுத்துவது போன்ற பல்வேறு விடயங்களை தெளிவுபடுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமல்லாது உத்தியோகத்தர்கள் தமக்குரிய பிரச்சினைகளை வைத்தியருடன் கலந்துரையாடி அதற்குரிய தீர்வினை பெற்றிருந்தமை சிறப்பிக்குரியது. இந்த நிகழ்வில் 45 உத்தியோகத்தர்கள் பங்கு பற்றி பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.