உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கையில் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் அமைப்பின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உப்பு பயன்பாடு
ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம்திகதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் மே மூன்றாவது வாரத்தில், உப்பு பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
“முக்கியமாக, ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் முக்கியம், குறிப்பாக உப்பின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பது மிகவும் முக்கியம் எனவும் அவர் கூறினார்.
மேலும், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது மற்றும் ள் மன அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம் என தெரிவித்த அவர், புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்ப்பதாலும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும் என்றார் .