அதிபர் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சர் வெளியிட்ட தகவல்
அதிபர் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜூலை மாதம் வெளியிடுவதற்கு தயாராகி வருவதாக அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தல் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டதன் பின்னர் எந்தவொரு அபிவிருத்திப் பணிகளையும் மேற்கொள்ள முடியாது எனவும் தேர்தல் முடியும் வரை அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த இடமளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, தமது அமைச்சின் கீழ் இவ்வருடம் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் துரிதப்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை அறிவிப்பு
இதேவேளை, அரசியலமைப்பு ரீதியாக உரிய காலத்திற்குள் அதிபர் தேர்தலை அறிவிக்கத் தயார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ஜனதா சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது தயார் படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.