;
Athirady Tamil News

இஸ்ரேல் தாக்குதல் எதிரொலி :ரபா நகரில் இருந்து ஆறு இலட்சம் மக்கள் இடம்பெயர்வு

0

மக்கள் தொகை அடர்ந்த ரபா நகரில் இருந்து சுமார் ஆறு லட்சம் மக்கள் இடம்பெயந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் (Israel) இராணுவமானது ரபா நகர் மீது தாக்குதலை நடத்த தொடங்கியுள்ளது.

இந்த நிலையில், ரபா நகர் மீது தாக்குதல் நடத்தினால் ஆயுதம் வழங்கமாட்டோமென இஸ்ரேலுக்கு அமெரிக்கா (America) எச்சரிக்கை விடுத்துள்ளது.

தரைவழி தாக்குதல்
முழு அளவில் ரபா மீது தரைவழி தாக்குதல் நடத்தக்கூடாதென அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் வலியுறுத்திய நிலையில் சிறிய அளவிலான வரையறுக்கப்பட்ட தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரபா மீதான தாக்குதல் தொடருமெனவும் மற்றும் கூடுதல் படைகள் ரபா நகருக்குள் நுழையுமெனவும் இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி யோவ் காலன்ட் (Yoav Gallant) தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பினர்
இதனுடன், ரபாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் சுரங்கங்களை அழித்து, 20 இற்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே ரபா மீது தாக்குதல் நடத்தப்படும் நிலையில், காசா முனையின் மற்ற பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் ஒன்றிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதாக கூறப்படுவதுடன் அப்படி தாக்குதல் நடத்துபவர்களை ஒழித்து கட்டியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும், ஹமாஸ் (Hamas) அமைப்புக்கு ஆதரவாக லெபனானில் இருந்துக்கு 20 இற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் இஸ்ரேல் நோக்கி தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.