;
Athirady Tamil News

நான்கு கை மற்றும் மூன்று கால்களுடன் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்

0

இந்தோனேசியாவில் (Indonesia) நான்கு கைகள் மற்றும் மூன்று கால்களுடன் ஒட்டியநிலையில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

இஸ்கியோபகஸ் டிரிபஸ் என அறிவியல் ரீதியாக அழைக்கப்படும் இந்த இரட்டையர்கள் மிகவும் அரிதாக இரண்டு மில்லியன் பிறப்புகளுக்கு ஒரு முறை மட்டுமே பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பேச்சுவழக்கில் இப்படி பிறப்பவர்களை “ஸ்பைடர் ட்வின்ஸ்” என குறிப்பிடுகிறார்கள்.

அறுவை சிகிச்சை
வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் சில மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த குழந்தைகள் குறித்த தகவல் வெளியாகி உலகம் முழுவதும் இது கவனம் பெற்றுள்ளது.

இக் குழந்தைகள் 2018 ஆம் ஆண்டில் பிறந்த நிலையில் தற்போதே தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

அறுவை சிகிச்சையிலும் இம்மாதிரியான குழந்தைகள் அதிக சிக்கலான தன்மை கொண்டதாக இருக்கின்ற நிலையில் இக்குழந்தைகள் உடலின் மேற்பகுதியில் அல்லாமல் உடலின் கீழ் பாதியில் இணைந்துள்ளனர்.

தனித்துவமான உடல் அமைப்பு
இவர்களின் தனித்துவமான உடல் அமைப்பு காரணமாக பிறந்த மூன்று ஆண்டுகளுக்கு இவர்களால் உட்கார முடியாமல் படுத்த நிலையிலேயே இருந்துள்ளனர்.

இவர்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் மூன்றாவது கால் நீக்கப்பட்டுள்ளதுடன் மேலும் சுதந்திரமாக நிமிர்ந்து உட்காருவதற்கு அவர்களின் இடுப்பு மற்றும் கால்களையும் சிகிச்சையின் மூலம் வலுப்படுத்தியுள்ளார்கள்.

இருப்பினும் இவர்கள் ஒட்டிப்பிறந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.