;
Athirady Tamil News

உலகம் முழுவதும் வெப்ப அலையால் உயிரிழப்போர் எத்தனைபேர் தெரியுமா..!

0

உலகளாவிய ரீதியில் ஏற்படும் கடும் வெப்ப அலைகளால் ஒவ்வொரு ஆண்டும் 1.53 இலட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலக அளவில் ஏற்படும் வெப்ப அலைகள் குறித்தும், அது ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. அதன் அறிக்கையிவேயே மேற்கண்ட அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் ஒன்றரை இலட்சம் பேர்
இந்த புள்ளி விவரங்கள் கடந்த 1990-ம் ஆண்டு முதல் 30 ஆண்டுகள் வரை எடுக்கப்பட்டுள்ளன.

50 சதவீதம் பேர் ஆசியாவில்
இந்த ஆய்வின்படி ஒவ்வொரு ஆண்டும் கோடையில் 1.53 லட்சம் பேர் இறக்கின்றனர். அவர்களில் 50 சதவீதம் பேர் ஆசியாவில் இறப்பதாக மோனாஷ் பல்கலைக்கழக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஏற்படும் 1.53 லட்சம் இறப்புகளில், இந்தியாவில் 20 சதவீதமாக உள்ளது. வெப்ப சலன இறப்புகளில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. சீனாவில் உயிரிழப்பு 14 சதவீதம், ரஷ்யாவில் 8 சதவீதமாக உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.