இங்கிலாந்தில் கடந்த ஆண்டில் மட்டும் கிடைத்த வரலாறு காணாத அளவிலான புதையல்கள்
மேலை நாடுகளில் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் புதையல் தேடுவதை பிழைப்பாகவே செய்பர்கள் கூட இருக்கிறார்கள். இந்நிலையில், இங்கிலாந்தில், கடந்த ஆண்டில் மட்டும் வரலாறு காணாத அளவில் புதையல்கள் கிடைத்துள்ளதாக பிரித்தானிய நீதித்துறை தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத அளவில் புதையல்கள்
இங்கிலாந்திலும், வேல்ஸ் நாட்டிலும் வரலாறு காணாத அளவில் புதையல்கள் கிடைத்துள்ளன. 1,219 புதையல்கள் கிடைத்துள்ளதாக தங்களுக்கு தகவல் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், 2022ஐ விட கடந்த ஆண்டில் 12 சதவிகிதம் அளவுக்கு அதிக புதையல்கள் கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், விலைமதிப்புமிக்க நாணயங்கள் போன்ற புதையல்கள் மக்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவதுடன், விலை மதிப்பில்லாத தோல் பொருட்கள் போன்றவையோ, மக்கள் எப்படி முற்காலத்தில் வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுபவையாக அமைவதால் அவையும் முக்கியத்துவம் வாய்ந்தவையே என்கிறார்கள் தொல்பொருள் ஆய்வாளர்கள்.