ரிஷி சுனக்கால் போகுமிடமெல்லாம் திட்டு வாங்கும் நபர்: ரிஷியைப் போலவே இருக்கும் யார் அவர்?
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கைப் போலவே காணப்படும் ஒருவர் பிரித்தானியாவில் கவனம் ஈர்த்து வருகிறார்!
யார் அவர்?
பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் சஞ்சுவை (48) பார்த்து சிலர் சத்தமிட, சிலர் கெட்ட வார்த்தையால் திட்ட, சிலர் அவர் மீது தண்ணீரை வீசியடித்திருக்கிறார்கள். சமீபத்தில் ஒருவர் அவர் மீது முட்டை ஒன்றை வீசியடித்துள்ளார்.
அதற்குக் காரணம், பார்ப்பதற்கு, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்குக்கு வயதானால் எப்படி இருப்பாரோ, அப்படியே தோற்றமளிக்கிறார் சஞ்சு.
முதலில் மக்கள் தன்னை ரிஷி என அழைக்க, ஏன் அப்படி அழைக்கிறார்கள் என யோசித்த சஞ்சுவுக்கு பிறகுதான் உண்மை தெளிவாகியுள்ளது.
விடயம் என்னவென்றால், உள்ளாட்சித் தேர்தல்களில் ரிஷி கட்சி தோல்விகளை சந்தித்துள்ளதால், போகுமிடமெல்லாம் திட்டு விழுகிறதாம் சஞ்சுவுக்கு. தன்னையும் அரசியலுக்குக் கொண்டுவந்தால், ரிஷி தேர்தலில் ஜெயிக்க தான் அவருக்கு உதவி செய்யப்போவதாகவும் வேடிக்கையாக கூறுகிறார் சஞ்சு!