யாழ். பல்கலையின் மருத்துவப் பீட கட்டிடத்தை திறந்து வைக்கவுள்ள ஜனாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.
வடக்கு மாகாணத்திற்கு இருநாள் விஜயமாக வருகைதரும் ஜனாதிபதி இம்மாதம் 24ம் திகதி குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார்.
இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன.
இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலை அதிகரிப்பால் செலவு அதிகரித்து கட்டிடத் தொகுதி இன்னும் நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளது.