சால்மன் மீனை சாப்பிடுவதால் உடலுக்கு தரும் நன்மை என்னனு தெரியுமா?
பெரிய கடல்களில் இருக்கக்கூடிய சால்மன் மீன்களில் என்னென்ன நன்மைகள் இருக்கின்றது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
சால்மன் மீன்
சால்மன் மீன்கள் கடல்களில் வாழ்ந்தாலும் இவை நன்னீர் பகுதிகளில் தான் குஞ்சு பொரிக்கின்றன.
இந்த மீன்களில் மேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் B1, B2, B3, B5, B12 வைட்டமின்கள், செலினியம் போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன.
இந்த மீனில் பொதுவாக நமது உடல் உறுப்புக்களுக்கு தேவைான பயன் நிறைவாக காணப்படகின்றது. இதை குழந்தைகளின் உணவில் அடிக்கடி கொடுத்து வருவது மிகவும் நல்லது.
இதை உணவில் எடுத்துக்கொள்ளும் போது மூளை வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் காணப்படுகின்றது. நரம்பு மண்டலத்தை வலுப்படுத்தி சருமத்தை பாதுகாக்கிறது.
வயதானவர்களுக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த மீனை உணவாக எடுத்துக்கொள்ளலாம் இருதயப்பிரச்சனை இருப்பவர்களுக்கு சால்மன் மீன் மிகவும் நன்மை தரும்.
இந்த மீனினால் மனிதனுக்கு கிடைக்க கூடிய நன்மைகள் பற்றி பல ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், போன்ற அனைவருக்கும் இந்த சால்மன் மீன் தீர்வு கொடுக்கிறது.
எனவே சால்மன் மீன்களை வாரத்தில் மூன்று நாட்களாவது உணவாக எடுத்துக்கொள்வது நன்மையளிக்கிறது.