ஒரு கிலோ எலுமிச்சை ரூ.3000 – வரலாறு காணாத உச்சத்தை தொடும் எலுமிச்சை, இஞ்சி விலை
இலங்கையில் வரலாறு காணாத வகையில் எலுமிச்சையின் விலை உச்சத்தை எட்டியுள்ளதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உச்சத்தை தொட்ட எலுமிச்சை, இஞ்சி விலை
இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு காய்கறிகளின் விலைகள் அண்மை காலங்களில் அதிகரிக்கப்பட்டிருந்தன.
இலங்கை வாழ் மக்கள் ஒரு காலத்தில் காய்கறிகளை உண்பது கனவாகி விடுமளவிற்கு காய்கறிகளின் விலையானது அதிகரித்த வண்ணம் இருந்தது.
ஒரு கிலோ கரட்டின் மொத்த விலை இரண்டாயிரம் ரூபாவாகவும் ஒரு கிலோ போஞ்சியின் விலை 1000 ரூபாவாகவும் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை 800 ரூபாவாகவும் கடந்த 4 மாதங்களுக்கு முன் விற்கப்பட்டிருந்தன.
இதனால் பொது மக்கள் உள்ளிட்ட பல வியாபாரிகள் பாரியளவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அதைப்போன்று தற்போது நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ எலுமிச்சை விலையும் 3000 ரூபாவைத் தாண்டியுள்ளது.
ஊவா மாகாணத்தில் இருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு எலுமிச்சை பழம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது முன்பை போல் போதியளவு எலுமிச்சை பழம் கிடைப்பதில்லை எனவும் அந்த நிலையம் தெரிவிக்கின்றது.
இதனால் எலுமிச்சை பழத்தின் மொத்த மற்றும் சில்லறை விற்பனை விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு சில கடைகளில் ஒரு எலுமிச்சையின் விலை ரூ.100 இற்கும் விற்பனை செய்வதாக நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் நேற்யை தினம் பேலியகொடை சந்தையில் ஒரு கிலோ இஞ்சி 3,200 ரூபாவாக விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.