தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறப்பட்டது
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தினால் கந்தர்மடத்தில் அமைந்துள்ள அதன் தலைமைச் செயலகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை [17-05-2024] முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிப் பரிமாறப்பட்டது.
பெருமளவிலானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டிருந்தார்கள்.பிள்ளைகளைப் பெற்றோர்கள் அழைத்து வந்து கஞ்சி பருக வைத்ததோடு கஞ்சியின் நோக்கத்தைப் பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்தியதையும். காண முடிந்தது,
போரில் மடிந்தவர்களையும், அதன் அழிவுகளையும் அவலங்களையும் அடுத்த சந்ததிக்கு எடுத்துச்சொல்லும் விதமாக வடக்குக் கிழக்கு எங்கும் ஆண்டுதோறும் மே 12 தொடங்கி 18 வரையான காலப்பகுதி முள்ளிவாய்க்கால் வாரமாக உணர்வு பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
போரில் உயிர் காத்த ஓரேயொரு உணவான கஞ்சி ஒரு நினைவுக்குறியீடாக இக்காலப் பகுதியில் காய்ச்சிப் பரிமாறப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் கஞ்சி பரிமாறுதலின்போது தென்னம்பிள்ளைகளும் வழங்கி வைக்கப்படடன.