கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இரண்டு இலங்கையர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
டுபாயில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் பொருட்களை கொண்டு வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு தொகை கையடக்க தொலைபேசி மற்றும் பென் ட்ரைவர்களை வரி செலுத்தாமல் கொண்டு வந்தமை விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
கையடக்கத் தொலைபேசிகள்
இரண்டு சந்தேகநபர்களும் 1,083 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200 USB பென் டிரைவ்களை விமான நிலையம் மூலம் நாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்துள்ளனர்.