தைவான் நாடாளுமன்றத்தில் தகராறு: வெளியான பரபரப்பு காணொளி
தைவான் (Taiwan) நாடாளுமன்றத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்பான வாக்கெடுப்பின் போது முக்கிய கட்சிகளின் அரசியல் பிரதிநிதிகளிடையே தகராறு ஏற்பட்டுள்ள காணொளியானது சமூக வளைதளங்களில் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்பட்ட தகராறின் காரணமாக தைவான் நாடாளுமன்றமே போர்க்கலாமாக காட்சியளித்துள்ளதுடன் வெளியான காணொளியில், அரசியல் பிரதிநிதிகள் ஒருவைரை ஒருவர் தள்ளிவிட்டு அடித்துக்கொள்ளும் காட்சிகள் பகிரப்பட்டுள்ளது.
சபாநாயகரின் இருக்கைக்கு அருகில் சென்ற பிரதிநிதிகள் மேசை மீது ஏறி நின்று கூச்சலிட்டும் ஒருவரை ஒருவர் இருக்கையில் இருந்து கீழே இழுத்தும் தாக்கிக்கொண்டுள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சி
அத்தோடு, தைவானில் பிரதான எதிர்க்கட்சி (KMT) மற்றொரு கட்சியான தைவான் மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் ஆளும் கட்சி (DPP) பெரும்பான்மையை இழந்துள்ளது.
இந்த நிலையில், அதிபராக தேர்ந்துடுக்கப்பட்டுள்ள லாய் சிங் தே இன்னும் சில நாட்களில் அரசு பதவி ஏற்க உள்ள நிலையில் இதைப் பயன்படுத்தி அரசாங்கத்தை விட நாடாளுமன்றத்துக் அதிக அதிகாரம் வழங்குதல் மற்றும் அரசின் முக்கிய பிரமுகர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்தல் உள்ளிட்டவற்றை எந்த விவாதமும் முன்னறிவிப்பும் இன்றி நிறைவேற்ற பெரும்பாண்மை வாக்குகள் கொண்ட எதிர்க்கட்சி முயன்றதே இந்த தகராறுக்கு காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து பன்றிகளை இறக்குமதி செய்யும் விவகாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு எதிர்க்கட்சினர் கட்சியினர் ஆளுங்கட்சியினர் மீது பன்றியின் குடலை எரிந்து தைவான் நாடாளுமன்றத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Taiwan’s opposition alliance, which holds a majority in the Legislative Yuan, has submitted a bill for reforming the legislature.
The ruling DPP, in an effort to prevent the bill from passing – sent a lawmaker to snatch it away.
Really, snatched it.😅pic.twitter.com/17PYIjwO02— ShanghaiPanda (@thinking_panda) May 17, 2024