சீனாவின் பிடியில் சிக்கிய தைவான் இராணுவ அதிகாரி: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
சீனாவின் (China) பிடியில் உள்ள தனது இராணுவ அதிகாரியை உடனடியாக விடுவிக்குமாறு சீன அரசை தைவான் (Taiwan) கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, சீன அதிகாரிகளால் மீட்கப்பட்ட இராணுவ அதிகாரியை விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று தைவான் கோரியுள்ளது.
கடந்த 14 ஆம் திகதி மீன்பிடிக் கப்பலில் பயணித்த இராணுவ அதிகாரியுடன் குறித்த படகு கடல் எல்லையில் விபத்துக்குள்ளானது.
மறைக்கப்பட்ட அடையாளம்
பின்னர், சீன கடலோர காவல்படை சம்பந்தப்பட்ட தைவான் இராணுவ அதிகாரியை மீட்டு காவலில் எடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
எவ்வாறாயினும், தனது காவலில் உள்ள தைவான் இராணுவ அதிகாரி தைவான் இராணுவத்தில் 25 வயதான தீவிர உறுப்பினர் என்றும் அவரது அடையாளத்தை வேண்டுமென்றே மறைத்துவிட்டார் என்றும் சீனா குற்றம் சாட்டுகிறது.