;
Athirady Tamil News

இங்கிலாந்தில் தாய் இறந்துபோனது தெரியாமல் அழுதுகொண்டிருந்த குழந்தை கூறிய வார்த்தைகள்

0

இங்கிலாந்தில், தன் தாய் இறந்தது தெரியாமல் அழுதுகொண்டிருந்த ஒரு குழந்தை, அம்மா எழும்பமாட்டேன்கிறார் என்று கூறிய வார்த்தைகள் காண்போரை கண்கலங்க வைப்பதாக அமைந்தன.

நெஞ்சு வலி காரணமாக அவசர உதவியை அழைத்த பெண்
இங்கிலாந்தின் Wolverhampton என்னுமிடத்தில் வாழ்ந்துவந்தவர் லாரன் (Lauren Page Smith, 29). கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் 6ஆம் திகதி, லாரனுக்கு நெஞ்சு வலி ஏற்படவே, அவசர உதவியை அழைத்துள்ளார். ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் லாரனை பரிசோதித்துவிட்டு, அவருக்கு ECG எடுத்துப் பார்த்துவிட்டு, கவலைப்படும் அளவில் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிச் சென்றுள்ளார்கள்.

சிறிது நேரத்தில், லாரன் உயிரிழந்துவிட்டார். வீட்டுக்கு வந்த அவரது தாயாகிய Emma Carrington, லாரன் குளியலறையில் இறந்துகிடப்பதையும், அவரது குழந்தை அவரைக் கட்டிக்கொண்டு அழுதுகொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள். எல்லாவற்றிற்கும் மேல், தன் தாய் இறந்ததை அறியாத அந்த குழந்தை ’Mummy won’t wake up’, அதாவது, அம்மா எழும்பமாட்டேன்கிறார் என்று கூற, காண்போர் கண் கலங்கியுள்ளார்கள்.

நீதிமன்ற அதிகாரிகள் விசாரணையில் தெரியவந்த உண்மை

ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் தன் மகளை சாகவிட்டுவிட்டதாக லாரனின் தாய் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் நடத்தப்பட்ட நீதிமன்ற அதிகாரியின் விசாரணையில், லாரனின் தாய் கூறியதுபோலவே, ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர்கள் கவனக்குறைவாக அல்லது சரியான மருத்துவ அறிவின்மை காரணமாக, லாரனுடைய ECGயில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்துகொள்ளாமல், அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

லாரன்ஸ் உதவி கோரி அழைத்தபோது ஆம்புலன்ஸ் அனுப்பிய West Midlands Ambulance Service அமைப்பு, தங்கள் ஊழியர்களின் தவறை ஒப்புக்கொண்டுள்ளதுடன், லாரனுடைய குடும்பத்தினரிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளது.

தான் கூறியதுபோலவே ஆம்புலன்ஸ் ஊழியர்களின் தவறுதான் தன் மகளுடைய மரணத்துக்குக் காரணம் என்பது தெரியவந்துள்ளதையடுத்து, தன் மகள் அவர்களால் எந்த அளவுக்கு தவறாக நடத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று கூறியுள்ள லாரனின் தாய், இனியாவது மற்றவர்களின் வாழ்வில் வேதனையை ஏற்படுத்தாத வகையில் நடந்துகொள்ளவேண்டும் என அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும் என்றும், லாரனை கவனிக்க வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அந்தப் பணியைச் செய்ய தகுதியானவர்களா என மருத்துவ அமைப்பு ஆராய்ந்து தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.