;
Athirady Tamil News

ஹமாஸ் தாக்குதல் குறித்து இளம்பெண் கூறிய விடயம்: நாடுகடத்த தயாராகும் பிரித்தானியா

0

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் குறித்து பாலஸ்தீனிய மாணவி ஒருவர் தெரிவித்த கருத்துக்களுக்காக, அவரை நாடுகடத்த பிரித்தானியா திட்டமிட்டுவருகிறது.

நடந்தது என்ன?
கடந்த ஆண்டு, அதாவது, 2023ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 7ஆம் திகதி, ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி 1,200க்கும் அதிகமான இஸ்ரேலியர்களைக் கொன்றதற்கு மறுநாள், பிரித்தானியாவிலுள்ள மான்செஸ்டர் பல்கலையில் சட்டம் பயிலும் பாலஸ்தீனிய மாணவியான டானா (Dana Abuqamar, 19), பாலஸ்தீன ஆதரவு பேரணி ஒன்றில் கலந்துகொண்டார்.

அப்போது அந்தப் பேரணியில் உரையாற்றிய அவர், நடந்த விடயத்தால் நாங்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளோம் என்று கூறினார். நவயுக வரலாற்றில், முதன்முறையாக இப்படி நடந்துள்ளது, 16 ஆண்டுகளாக காசா தாக்குதலுக்குள்ளாகிவருகிறது, முதன்முறையாக அவர்கள் எதிர் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்கள், இது ஒரு வாழ்நாள் அனுபவம் என்று கூறிய டானா, இஸ்ரேல் எப்படி பதிலடி கொடுக்கும் என்ற பயம் எங்களுக்கு உள்ளது, அதே நேரத்தில், நாங்கள் மிகவும் கௌரவமாக உணர்கிறோம், நடந்ததை அறிந்து முழு மகிழ்ச்சியில் திளைக்கிறோம் என்று கூறினார்.

பிரித்தானியா அதிரடி
டானாவின் கருத்துக்களுக்காக அவரது மாணவர் விசாவை ரத்து செய்துள்ள பிரித்தானிய உள்துறை அலுவலகம், அவரால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று அறிவித்துள்ளதுடன், அவரை நாடுகடத்தவும் திட்டமிட்டுவருகிறது.

அரசின் நடவடிக்கைகள் குறித்து பேசிய டானா, தனது வார்த்தைகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியா அரசு தனது மனித உரிமைகளை மீறிவிட்டதாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், ஒரு 19 வயது வயது மாணவியான தான் பள்ளிக்குச் செல்வது, சமூக நீதிக்காக குரல் கொடுப்பது, எனது சமுதாயத்துக்கு மதிப்புமிக்க ஒருவராக இருக்க முயல்வது தவிர வேறொன்றும் செய்யவில்லை என்றும், தன்னைப்போய் பிரித்தானிய அரசு தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று கூறுவது அடிப்படையற்ற வாதம் என்றும் கூறியுள்ளார்.

அத்துடன், அரசின் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் டானா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.