உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர்., நான்கு நாட்களுக்கு பிறகு காப்பாற்றிய பொலிஸ்
உயிருடன் புதைக்கப்பட்ட முதியவர் ஒருவரை நான்கு நாட்களுக்குப் பிறகு பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடான மால்டோவாவில் (Moldova) இந்த சம்பவம் நடந்துள்ளது.
74 வயதுடைய பெண் ஒருவர் வீடொன்றில் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் அங்கு வந்தனர். ஆனால் அக்கம் பக்கத்தில் இருந்து பொலிஸாருக்கு முனகல் சத்தம் கேட்டது.
சத்தத்தைக் கேட்டு குழி தோண்டப்பட்டது. அப்போது அங்கிருந்த நிலத்தடி வீட்டின் நுழைவு வாயில் மண் மூடியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மண்ணை அகற்றிய பின், நான்கு நாட்களாக உள்ளே இருந்த முதியவரை பொலிஸார் வெளியே எடுத்தனர். உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
முதியவர் கொடுத்த வாக்குமூலத்தின் படி, 16 வயது இளைஞனுடன் மது அருந்தியதாகவும், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, தன்னை அடித்ததாகவும், அடித்தளத்தில் வைத்து, நுழைவாயிலை மண்ணால் மூடி உயிருடன் புதைத்ததாகவும் அவர் பொலிஸாருடன் தெரிவித்தார்.
மறுபுறம் வீட்டில் உயிரிழந்த மூதாட்டியையும் அந்த இளைஞன் கொன்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், நான்கு நாட்களாக அடித்தளத்தில் உயிருடன் புதைக்கப்பட்ட முதியவரின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.