விரலுக்கு பதில் நாக்கில் ஆபரேஷன் – கதறும் 4 வயது சிறுமியின் குடும்பம்!
4 வயது குழந்தைக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை
கேரளாவைச் சேர்ந்த 4 வயது குழந்தைக்கு அவரது கையில் ஆறு விரல்கள் இருந்துள்ளது. இதில் ஆறாவது விரலை அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அதன்படி, நான்கு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது. வெளியே வந்தபோது குழந்தையின் வாயில் கட்டு மற்றும் பஞ்சு இருந்துள்ளது. ஆறு விரலும் இருந்துள்ளது.இதனை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே, தவறுதலாக நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவர் மன்னிப்பு கோரியுள்ளார். பின்னர், மீண்டும் அறுவை சிகிச்சை செய்து ஆறாம் விரல் அகற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், “குழந்தை அழும்போது நாக்கில் சிறு கட்டி இருந்ததை பார்த்தோம்.
புலம்பும் குடும்பம்
முதலில், நாக்கில் அறுவை சிகிச்சை செய்தோம். பின்னர், மற்றொரு அறுவை சிகிச்சை மூலம் ஆறாம் விரலை அகற்றினோம். நாக்கில் அறுவை சிகிச்சை செய்தது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, இந்த அறுவை சிகிச்சை மூலம் எதிர்காலத்தில் குழந்தைக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் மருத்துவக் கல்லூரி அதிகாரிகளே பொறுப்பு ஏற்க வேண்டும். இதுபோன்று இனி ஒரு குழந்தைக்கும் ஏற்படக்கூடாது எனக் கூறி சிறுமியின் தந்தை போலீஸில் புகாரளித்துள்ளார். தற்போது இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.