;
Athirady Tamil News

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் கப்பல் சேவை இடை நிறுத்தம்: வெளியான அறிவிப்பு

0

இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறை மற்றும் இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திற்கு இடையிலான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் சேவையானது நாளை (19.05.2024) ஆரம்பிக்கவிருந்த நிலையில் மீண்டும் பிற்போடப்பட்டுள்ளது.

கடந்த 13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில், சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டதுடன் மே 19 வரையில் கப்பல் சேவையை ஆரம்பிக்கும் நடவடிக்கைகள் பிற்போடப்பட்டிருந்தது.

பயணச்சீட்டு கட்டணம்
இந்த நிலையில், கப்பலில் காணப்படும் சில பாதுகாப்பு குறைபாடுகளை சரி செய்ததன் பின்னரே உரிய அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேவேளை, பயணச்சீட்டுகளுக்காக முன்பதிவு செய்தவர்கள், கட்டணத்தை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என ‘இந்த்ஸ்ரீ’ எனப்படும் தனியார் படகுசேவை நிறுவனத்தின் முகாமைத்துவம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொண்டு மீள பெற்றுக்கொள்ளலாம் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.