மேலும் இரண்டு நேட்டோ நாடுகளின் தலைநகரங்கள் ரஷ்யாவுக்கு… புடின் ஆதரவாளர் கொக்கரிப்பு
மூன்றாம் உலகப்போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்னும் சூழல் நிலவுகையில், புடின் ஆதரவாளர் ஒருவர், மேலும் இரண்டு நேட்டோ நாடுகளின் தலைநகரங்கள் ரஷ்யாவுக்கு சொந்தமாகும் என்று கூறியுள்ள விடயம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இரண்டு நேட்டோ நாடுகளின் தலைநகரங்கள் ரஷ்யாவுக்கு
புடின் ஆதரவாளரான Vladimir Solovyov என்பவர், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, உக்ரைன் தலைநகரான கீவ் மட்டுமல்ல, போலந்தின் தலைநகரான Warsawம், பின்லாந்தின் தலைநகரான Helskiniயும், ரஷ்யாவுக்கு சொந்தம் என்று கூறியுள்ளார்.
கீவ், ரஷ்ய நகரங்களின் தாய், உக்ரைனியர்கள் அங்கு குடியேறினார்கள் என்று கூறிய Vladimir, அதை அதன் தாய்நாட்டுக்கே சொந்தமாக்கவேண்டும் என்றும், வரலாற்றின்படி Warsawம் Helsinkiயும் எங்களுடையதுதான், அவையும் ரஷ்யர்களாகிய எங்களுடையதுதான் என்றும் கூறியுள்ளார்.
மேலும், அமெரிக்க மாகாணங்கள் செயலரான ஆண்டனி ப்ளிங்கன் ஆயுதங்களைக் கொண்டுவந்துள்ளார். ஆனால், அவற்றை ரஷ்ய எல்லைக்குள் தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடாது என்றும் கூறியுள்ளார். முட்டாள்களே, அப்படியானால் அவற்றை எந்த நாட்டுக்குள் பயன்படுத்துவீர்கள்? எல்லாமே ரஷ்யாதானே என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்துள்ளார் Vladimir.
ஆக, உலக நாடுகள் பல அஞ்சுவதுபோல, உக்ரைனுக்கு அடுத்து போலந்து மற்றும் பின்லாந்து மீதும் ரஷ்யா கண்வைத்துள்ளது Vladimirஇன் கூற்றிலிருந்து தெரியவந்துள்ளதால், அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் உருவாகியுள்ளது.