;
Athirady Tamil News

10 வருட Blue Residency Visa-வை அறிமுகப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம்., யார் விண்ணப்பிக்கலாம்?

0

ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக Blue Residency visa எனும் 10 வருட சிறப்பு விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அயராது உழைத்தவர்களுக்கு பத்து வருட நீலக் குடியுரிமை விசா (Blue Residency visa) வழங்கப் போவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.

துபாய் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் (Sheikh Mohammed bin Rashid), இம்மாதம் 15-ஆம் திகதி எக்ஸ் வலைத்தளம் மூலம் இதனைத் தெரிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம் சுற்றுச்சூழல் சமநிலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் எங்களின் போக்கு தெளிவாகவும், நிலையானதாகவும் உள்ளது, என்று அவர் கூறினார்.

கடல் விலங்கினங்கள், நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகள், காற்றின் தரம், நிலையான தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரிந்தவர்களுக்கு இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன.

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ICP) அதிகாரிகளிடம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.