;
Athirady Tamil News

ரணில் ஜனாதிபதியானால் பிரதமராகும் தொழில் அதிபர்

0

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஜனாதிபதியானால் கெசினோ நிறுவன உரிமையாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தம்மிக்க பெரேரா (Dhammika Perera) பிரதமர் நிலைக்கு பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவின் (Basil Rajapaksa) நெருக்கிய நண்பரான இவர், அந்த கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவார் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், ரணில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் பொதுஜன பெரமுன அவருக்கே ஆதரவளிக்கும் நிலையில் இருப்பதால் தம்மிக்க பெரேராவின் அரசியல் எழுச்சி கடந்த சில மாதங்களாக பேசப்படவில்லை.

மேதினச் செலவுகள்
இந்நிலையில், கடந்த மேதினத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் மத்தியில் இன்னும் ஆதரவு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தம்மிக்க பெரேராவின் பங்களிப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளதோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினச் செலவுகளை அவரே பொறுப்பேற்றிருந்தார்.

அத்துடன் எதிர்வரும் தேர்தல் செலவுகளையும் அவரே ஏற்றுள்ளார். இதில் ஒரு கட்டமாக, தேர்தலுக்காக கட்சியின் செயல்பாட்டு அறைக்கு அண்மையில் பெருமளவான கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கினால், பிரதமர் நிலைக்கு தம்மிக்க பெரேராவே பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.