;
Athirady Tamil News

ஈரானிய அதிபர் பயணித்த உலங்கு வானூர்தி விபத்து: மீட்பு பணியில் ஏற்பட்டுள்ள சிக்கல்

0

புதிய இணைப்பு
ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசிபயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதை தொடர்ந்து பல மணிநேர தேடுதலுக்குப் பிறகு, விபத்து நடந்த இடத்தைக் கண்டுபிடித்துள்ளதாக ஈரானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அங்கு குழுக்களை அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைதூர, மலைகள் நிறைந்த கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் தேடுதல் பணி கடினமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இரண்டாம் இணைப்பு

ஈரானின் அரச தொலைக்காட்சி, தமது வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்தியுள்ளது .

நாடு முழுவதும் அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்தனைகள் நடத்தப்படுவதையும், திரையின் ஒரு மூலையில், கடுமையான மூடுபனியில் மலைப் பகுதியில் நடந்தே சென்று¸ ஈரானிய அதிபரின் உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதான கூறப்படும் இடத்தில் தேடுதல் நடத்தும் மீட்புக் குழுவினரின் நடவடிக்கைகளையும் நேரடியாக ஒளிபரப்பி வருகிறது.

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அவரது வெளியுறவு அமைச்சர் ஆகியோர் பயணித்த உலங்கு வானூர்தி, அஸர்பைஜான் எல்லைக்கு சென்று திரும்பும் வழியில் கடும் பனிமூட்டம் நிறைந்த மலைப்பகுதியை கடக்கும்போது விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தைத் தொடர்ந்து ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகியோரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு
ஈரானிய (Iran) ) அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) பயணித்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதான அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அஸர்பைஜான் (Azerbaijan) நாட்டு எல்லையில் உள்ள ஜோல்ஃபா நகருக்கு அருகில் இந்த சம்பவம் நடந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, ரைசியுடன் ஈரானின் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்டோலாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

ரைசியின் உடல்நிலை
அசர்பைஜான் – ஈரான் இடையே பாயும் அரஸ் ஆற்றின் குறுக்கை புதிதாக அணை கட்டப்பட்டுள்ள அணை திறப்பு விழாவிற்காக இப்ராகிம் ரைசி இன்று அசர்பைஜான் சென்றிருந்தார்.

நாடு திரும்பிக்கொண்டிருந்த இப்ராகிம் ரைசி பயணித்த உலங்கு வானூர்தி மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக கருத்தப்படும் பகுதியில் கடுமையான மழை மற்றும் பனி மூட்டம் இருப்பதால் மீட்புப்பணிகள் தாமதாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டு உள்ளூர் அரசாங்க அதிகாரி ஒருவர் சம்பவத்தை விபரிக்க “விபத்து” என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதுடன் அரச ஊடகம், ரைசியின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் வழங்கவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.