ஜேர்மனியில் அதிர்ச்சி சம்பவம்… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 38 சிறார்கள்: 700 பேர் வெளியேற்றம்
ஜேர்மனியில் பெந்தெகொஸ்தே கூடார முகாம் மீது மின்னல் தாக்கியதில் 38 சிறார்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்து 700 பேர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சி சம்பவம்
ஜேர்மனியின் Soest மாவட்டத்திலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பெந்தெகொஸ்தே கூடார முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருந்த நிலையில் மின்னல் தாக்கியதாக கூறப்படுகிறது.
மிக வலுவான புயல் Soest மாவட்டத்தில் கடந்து சென்ற நிலையிலேயே மின்னர் தாக்கியுள்ளது. இதனையடுத்து சிறார்கள் மற்றும் அவர்களின் கவனிப்பாளர்கள் என 700 பேர்கள் அருகாமையில் உள்ள பழைய ராக்கெட் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
100 தீயணைப்பு வீரர்கள்
சம்பவம் தொடர்பில் வெளியான முதற்கட்ட தகவலின் அடிப்படையில், அவசரகால சேவைகள் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி எவருக்கும் காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என்றே தெரிய வந்துள்ளது.
சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்தில் வரவழைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். மிக குறுகிய நேர இடைவெளியில் இரண்டு மின்னல்கள் தாக்கியதாக கூறுகின்றனர்.
இதனையடுத்து Soest மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் 38 சிறார்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலானோருக்கு லேசான காயங்கள் என்றே கூறப்படுகிறது.