;
Athirady Tamil News

ஈரான் ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்யும் மகிந்த

0

உலங்கு வானூர்தி விபத்தில் காணாமல் போயுள்ள ஈரானிய ஜனாதிபதிக்காக பிரார்த்தனை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ராய்சி (Ebrahim Raisi) உள்ளிட்டவர்கள் பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உலங்கு வானூர்தி விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி உள்ளிட்ட பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காக முக்கியமானது என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நெருக்கடியான தருணம்
மேலும், இந்த நெருக்கடியான தருணத்தில் ஈரானிய மக்களுடன் தானும் இணைந்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய ஜனாதிபதி மற்றும் பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை செய்வதாக சமூக ஊடகத்தில் மகிந்த ராஜபக்ச பதிவிட்டுள்ளார்.

வெளிவிவகார அமைச்சர்
இதேவேளை, ஈரானிய ஜனாதிபதி பயணம் செய்த உலங்கு வானூர்தி விபத்து தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும்(Ali Sabry) சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜனாதிபதி உள்ளிட்ட விபத்தில் சிக்கியவர்களுக்காக பிரார்த்தனையில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.