யாழில். போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது
போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சங்கானை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவரை பொலிஸார் சோதனையிட்ட போது , இளைஞனின் உடைமையில் இருந்து 25 போதை மாத்திரைகளை மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து இளைஞனை கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.