மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!
நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வில் தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர் பலர்கலந்து கொண்டிருந்தனர்.
முன்பதாக கடந்த மாம் 12 ஆம் திகதி குறித்த பாடசாலை சமூகத்தினரின் வேண்டுதலுக்கிணங்க களவிஜயம் செய்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இம்மாதம் அதாவது இன்று 20 ஆம் திகதியிலிருந்து அதாவது பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் தினத்திலிருந்து யா/மட்டுவில் ஸ்கந்தவரோதயா மகாவித்தியாலயத்தில் ஆரம்ப பிரிவு வகுப்புக்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார். அதனடிப்டையிலேயே இன்று குறித்த பாடசாலையின் ஆரம்ப பிரிவு இன்று சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
முன்பதாக யாழ் மாவட்டத்தில் குறிப்பாக தென்மராட்சி வலயத்தில் மிகவும் பழைமைவாய்ந்த அதாவது 150 ஆவது வருடத்தை நெருங்கும் வரலாற்றை கொண்ட பாடசாலைகளுள் ஒன்றான யா/ மட்டுவில் மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்றுமுதல் உயர்தரம் வரையிலான வகுப்புக்கள் இருந்துவந்துள்ளன.
ஆனால் சில வருடங்களாக இதரபல காரணங்களால் இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு வகுப்புகள் அதிகாரிகளால் இடைநிறுத்தப் பட்டிருந்தன.
இதையடுத்து குறித்த பகுதி கல்வி சமூகத்தினரும் நலன்விரும்பிகளும் பெற்றோரும் தமது பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்களை இடைநிறுத்தியமைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன் அவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கும் கொண்டுவந்திருந்தனர்.
அதனடிப்படையில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக பாடசாலைக்கு அமைச்சர் நேரில் சென்று ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர் மற்றும் கல்விப்புலத்தினரின் கருத்துக்களை ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இந்நிலையில் குறித்த பிரச்சினை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று மீளவும் குறித்த ஆரம்ப பிரிவு வகுப்புகளை முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதையடுத்து இன்றையதினம் மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றைதினம் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த பிரதேச கல்விச் சமூகம் மற்றும் பெற்றோர் சமூக ஆர்வலர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இந்த சமூக அக்கறையை பாராட்டி கௌரவித்துள்ளதுடன் தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.