ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு கோரிக்கை
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நாளில் நடத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB), அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா (Harshana Rajakaruna) இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தல் குறித்த அநேகமான கருத்துக் கணிப்புக்களில் சஜித் பிரேமதாச முன்னணி வகிக்கிறார். எந்தவொரு தேர்தலையும் எதிர்நோக்கத் தயார்.
பொருத்தமான தீர்மானம்
பொதுத் தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய நல்ல குழுவொன்று எங்களிடம் உள்ளது.
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை ஒரே தடவையில் நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வாறு இரண்டு தேர்தல்களையும் நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கல்களும் இல்லை.
தற்போதைய ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை கிடையாது. தற்போதைய அமைச்சரவையை மக்கள் நிராகரிக்கின்றனர்.
எனவே இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக நடத்துவது பொருத்தமானது” என கூறியுள்ளார்.