;
Athirady Tamil News

ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு கோரிக்கை: ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்

0

நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பூஜ்ய கலகொட அத்தே ஞானசார தேரருக்கு(Galagoda Aththe Gnanasara) ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெசாக் போய தினத்தை முன்னிட்டு ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு குரகல விகாரை தொடர்பில் கருத்து வெளியிட்டதன் மூலம் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ஞானசார தேரருக்கு அண்மையில் நீதிமன்றினால் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மகாநாயக்க சங்க கடிதம்
இது தொடர்பில் மகாநாயக்க சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில்,

“கலகொட அத்தே ஞானசார தேரர் கடந்த காலங்களில் இலங்கையில் சிங்கள பௌத்த தேசியத்திற்காக குரல் எழுப்பியதுடன் சமூகத்தில் இடம்பெற்றுவரும் சில தீவிரவாத செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இலங்கை சமூகத்தில் சில தீவிரவாத சக்திகள் பரவுவதைத் தடுக்க பாதுகாப்புப் படையினருக்கு ஆதரவு கிடைத்துள்ளது என்பது இரகசியமல்ல.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக ஆதரவு தேவை எனவே இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்து கலகொடவை சேர்ந்த ஞானசார ஸ்தாவீரவிற்கு மன்னிப்பு வழங்க நடவடிக்கை எடுக்க விரும்புகின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.