;
Athirady Tamil News

இப்ராஹிம் ரைசியின் மரணத்தில் இருக்கும் மர்மம்: சந்தேகம் வெளியிட்டுள்ள ஈரானின் ஆன்மீகத் தலைவர்

0

ஈரான் அதிபரின் மரணம் ஏவுகணைத் தாக்குதலால் ஏற்பட்டிருக்கலாம் என ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அல் கமேனி (Ayatollah Ali Khamenei) சந்தேகம் வெளியிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) பயணித்த உலங்ககு வானூர்தி கிழக்கு அஸர்பைஜானுக்கு அருகிலுள்ள ஜோல்பா பகுதியில் நேற்று முன் தினம் (19) விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியான், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலிக் ரஹ்மதி, தப்ரிஸ் மாகாணத்தின் இமாம் முஹம்மது அலி அல் ஹாஷிம் ஆகியோர் உயிரிழந்தனர்.

இஸ்ரேலின் சதி
இதனிடையே, ஈரான் அதிபரின் திடீர் மரணம் குறித்து ஹமாஸ் அமைப்பும் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஈரான் அதிபர் பயணித்த உலங்கு வானுார்தி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னால் இஸ்ரேலின் சதியும் காணப்படலாம் என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலையில், ஈரான் அதிபர இப்ராஹிம் ரைசியின் மரணத்திற்குப் பின்னர் ஈரான் துணை அதிபராக உள்ள முஹம்மது முக்பர் அதிபராக பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.