உதிரி பாகம் கூட கிடைக்காத பழைய ஹெலிகாப்டர்., ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த முக்கிய காரணி
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) பயன்படுத்திய பெல் 212 ஹெலிகாப்டர் (Bell 212 helicopter) மிகவும் பழமையானது என தெரியவந்துள்ளது.
இந்த பெல் 212 ஹெலிகாப்டர் 1960களில் தயாரிக்கப்பட்டது. இந்த ஹெலிகாப்டர் ஈரானிய புரட்சிக்கு முன்னர் அமெரிக்காவிடமிருந்து வாங்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
1960-களில் இருந்து இயங்கி வரும் அந்த ஹெலிகாப்டரின் உதிரி பாகங்களை கண்டுபிடிப்பது கடினம்.
உதிரி பாகங்கள் கிடைக்காததே ஹெலிகாப்டர் கீழே விழுந்ததற்கு காரணம் என அமெரிக்க ராணுவ ஆய்வாளர் செட்ரிக் லைடன் தெரிவித்துள்ளார்.
பெல் 212 ஹெலிகாப்டர் ஷா ஆட்சியில் ஈரானில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1976-இல் வணிக பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டது.
அந்த ஹெலிகாப்டரை அமெரிக்க ராணுவமும் பயன்படுத்தியது. 1960 முதல் பயன்பாட்டில் உள்ள ஹெலிகாப்டர்களுக்கு தற்போது உதிரி பாகங்கள் இல்லை என்று ராணுவ ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
வடமேற்கு ஈரானில் கடந்த சில நாட்களாக நிலவும் வானிலையும் ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது. அடர்ந்த பனி, மழை மற்றும் குளிர் காலநிலை காரணமாக ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.
பெல் ஹெலிகாப்டர் நிறுவனம் இப்போது Bell Textron என்று அழைக்கப்படுகிறது.
பெல் 212 ஹெலிகாப்டர் 1960-இல் கனேடிய இராணுவத்திற்காக உருவாக்கப்பட்டது. இது UH-1 Iroquois-க்கு மேம்படுத்தப்பட்டதாக உருவாக்கப்பட்டது. புதிய வடிவமைப்பில் இரண்டு டர்போ என்ஜின்கள் உள்ளன.
1971-ஆம் ஆண்டில், பெல் ஹெலிகாப்டர் அமெரிக்க மற்றும் கனேடிய இராணுவத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பெல் 212 ஒரு பயன்பாட்டு ஹெலிகாப்டர் என்று அழைக்கப்படுகிறது. இது எல்லா சந்தர்ப்பங்களுக்கும் பயன்படுத்தப்படலாம். இது பயணிகள், வான்வழி தீ அணைப்பு, சரக்கு மற்றும் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் ஈரானில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் மொடல் அரசு பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெல் 212 ஹெலிகாப்டர் ஜப்பான் கடலோர காவல்படை, அமெரிக்க பாதுகாப்பு படை மற்றும் தீயணைப்பு துறை ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிறது. தாய்லாந்தின் தேசிய காவல்துறையும் இதைப் பயன்படுத்துகிறது.
ஆனால், ஈரான் அரசிடம் எத்தனை பெல் 212 ஹெலிகாப்டர்கள் உள்ளன என்பது தெரியவில்லை. ஆனால் கமாண்ட் விமானப்படை மற்றும் கடற்படையிடம் 10 ஹெலிகாப்டர்கள் உள்ளன.