;
Athirady Tamil News

தைவானின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற வில்லியம் லாய்., சீனாவிற்கு எதிர்ப்பு

0

தைவானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் (William Lai Ching-te) நேற்று  பதவியேற்றார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் வில்லியம் லாய் வெற்றி பெற்றார்.

தைபேயில் உள்ள ஜனாதிபதி அலுவலகக் கட்டடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் நடைபெற்றது.

பதவியேற்பு விழாவை அடுத்து ராணுவ அணிவகுப்பு நடத்தப்பட்டது. நாட்டுப்புற கலைஞர்களும் நிகழ்ச்சி நடத்தினர். தைவானின் தேசியக் கொடியுடன் ராணுவ ஹெலிகாப்டர்கள் பறக்கும் பயணத்தை நடத்தின.

தைவான் பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீனா கூறிவருவது தெரிந்ததே. அந்த நாட்டுக்கு எதிராக சீனா தனது ராணுவ பலத்தை பலமுறை பயன்படுத்தி வருகிறது.

இந்நிலையில், வில்லியம் லாய் தனது முதல் உரையில், தங்கள் நாட்டுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீனாவைக் கேட்டுக் கொண்டார்.

சீனாவின் ஆத்திரமூட்டும் செயல்கள் உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மிகப்பாரிய சவாலாக மாறி வருகிறது என்றார்.

தைவானில் ஒரு வளமான ஜனநாயகம் விரைவில் வரும் என்று லாய் கூறினார். ஜனநாயகம், அமைதி மற்றும் சகோதரத்துவம் தைவானின் ஒரு பகுதியாகும். மனித உரிமைகள் குறியீட்டில் தனது நாடு முன்னேறியுள்ளது என்றார்.

தைவானை அரசியல் ரீதியாகவும் இராணுவ ரீதியாகவும் அச்சுறுத்துவதை சீனா நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஜனாதிபதி வில்லியம் லாய் மற்றும் துணை ஜனாதிபதி சியா பி கிம் (Hsiao Bi-khim) ஆகியோர் மேடையில் ஆடிப் பாடினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.