13.64 வினாடிகளில் 1 லிட்டர் எலுமிச்சை ஜூஸை குடித்து கின்னஸ் சாதனை!
13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்த ஒருவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
கின்னஸ் சாதனை
அமெரிக்காவின் இடாகோ மாகாணத்தைச் சேர்ந்தவர் டேவிட் ரஷ். இவர், 13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்து உலக சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதற்கு முன்னதாக, 16.5 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸை (எலுமிச்சை சாற்றை) குடித்தவர் என்ற பட்டத்தை பெற்றிருந்தார்.
இதன்பிறகு, ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த சாதனையாளர் ஆண்ட்ரே ஆர்டோல்ஃப் என்பவர் 16 வினாடிகளில் லெமன் ஜூஸை குடித்து டேவிட்டின் சாதனையை முறியடித்தார்.
இவரின் சாதனையை முறியடிக்கும் விதமாக டேவிட் முயற்சி செய்து 13.64 வினாடிகளில் 1 லிட்டர் லெமன் ஜூஸை குடித்துள்ளார்.
இதுகுறித்த அனுபவத்தை பகிர்ந்த டேவிட் பேசுகையில், “இந்த விடயம் எனக்கு இனிதான விடயமாக இல்லை. இதனால் நான் வயிற்று வலிக்கு ஆளானேன்” என்றார்.
பல்வேறு புதுமையான விடயங்களை மேற்கொள்ளும் டேவிட், 250 -க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை முறியடித்துள்ளார்.
இவர் தற்போது செய்த சாதனையையும் சேர்த்து 165 பட்டங்களை தன்வசம் வைத்துள்ளார். மேலும், இவர் தன்னுடைய வாழ்நாள் இலக்காக உலகில் உள்ளவர்களின் சாதனையை முறியடித்து அதிக சாதனைகள் புரிய வேண்டும் என்பது தான்.