;
Athirady Tamil News

ஜனாதிபதியின் மரணத்தை பட்டாசு வெடித்து கொண்டாடும் ஈரானிய மக்கள்

0

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அந்நாட்டு மக்கள் கொண்டாடிவருகின்றனர்.

ஈரான் நாட்டில் ஒரு சோகம் நடந்துள்ளது தெரிந்ததே. அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

ஆனால் ஈரான் அதிபரின் மரணச் செய்தியை அந்நாட்டு மக்கள் கொண்டாடினர்.

ரைசியின் மரணத்தை பட்டாசு வெடித்தும், மது விருந்தளித்தும் கொண்டாடுவது தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

இப்ராஹிம் ரைசியின் மரணச் செய்தி அறிவிக்கப்பட்டதும், ஈரானில் நூற்றுக்கணக்கான மக்கள் தெஹ்ரான் மற்றும் மஷாத்தின் முக்கிய சதுக்கங்களில் கூடி கொண்டாடினர். பட்டாசுகளை வெடித்தனர்.

வெளிநாடுகளில் உள்ள ஈரானியர்களும் இதனைக் கொண்டாடினர். சில ஈரானியர்கள் லண்டனில் உள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதரகம் முன் கூடி கொண்டாடினர். சிலர் இனிப்புகளை வழங்கினர்.

இது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த கொண்டாட்டங்களுக்கு பெண்கள் உரிமை ஆர்வலர் Masih Alinejad, தனது X பக்கத்தில், “வரலாற்றிலேயே, ஐயோ யாராவது உயிர் பிழைத்துவிட போகிறார்கள் என்று கவலைப்பட்ட ஒரே விபத்து இதுவாகத்தான் இருக்கும்” என்று அவர் கூறினார்.

மேலும், இந்த நாளை அவர் “உலக ஹெலிகாப்டர் தின வாழ்த்துகள்” என ட்வீட் செய்துள்ளார்.

ஈரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ரைசி மிகவும் கொடூரமானவர் என்று குற்றம் சாட்டப்பட்டார். இஸ்லாமிய பழக்க வழக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஈராக்-ஈரான் போரின் போது பிடிபட்ட கைதிகளை ரைசி கொடூரமாக தூக்கிலிட்டதாகவும், தனது எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக போராடியவர்களை கடுமையாக தண்டித்ததாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஈரான் மக்கள் ரைசிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக உள்ளூர் ஊடகங்களில் தொடர் கதைகள் வெளியாகி வருகின்றன.

இந்தப் பின்னணியில்தான் அவரது மரணத்தை ஈரான் மக்கள் இப்படிக் கொண்டாடி வருவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.