முள்ளிவாய்க்கால் படுகாெலைக்கு நீதி காேரி லண்டனில் பாேராட்டம்
முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி லண்டனில் உள்ள தமிழர்கள் சனிக்கிழமை (18.05) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்றும் வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேரணியில் கலந்து கொண்ட தமிழர்கள், பிரித்தானிய பிரதமரின் இல்லமான டவுனிங் வீதியை நோக்கி பேரணியாக சென்றனர்.
தமிழர் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்களுக்கு எதிராகவும் இராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவருமாறும் கோஷங்களை எழுப்பி போராடியிருந்தனர்.
தொடந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் வகையில் டவுனிங் வீதிக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள உயிர் நீத்த தமிழர்கள் அடையாள நினைவுச் சின்னத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இதில் புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து காெண்டனர்.