நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு
நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தமக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக எம்.பி.க்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது.
சபைக் குழு கூட்டத்தில் சபாநாயகரிடம் எம்.பி.க்கள் குழு இது தொடர்பில் முறைப்பாடு அளித்தது.
சபாநாயகரின் அறிவிப்பு
உணவுக்காக அறவிடப்படும் தொகைக்கு நியாயமான உணவை வழங்குமாறும் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன், இது தொடர்பில் சபாநாயகர் நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலை பிரிவுக்கு அறிவித்துள்ளார்.
ஏறக்குறைய இருபது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சாப்பிடுவதைத் தவிர்த்து வருகின்றனர்.
வருடாந்த உணவுச் செலவு
நாடாளுமன்றத்தின் வருடாந்த உணவுச் செலவு சுமார் பன்னிரெண்டு கோடி ரூபாவாகும், அதில் பெரும்பாலானவை நாடாளுமன்ற ஊழியர்களின் உணவுக்காகவே செலவிடப்படுகின்றன.