யாழில்.பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு
யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவரின் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர், பேருந்தில் சுழிபுரம் சென்ற பின்னர் , அங்கிருந்து மீள பிறிதொரு பேருந்தில் தனது வீடு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளையே பேருந்தில் வைத்து அவரது தாலிக்கொடி களவாடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை பேருந்து பயணங்களின் போது பெறுமதியான நகைகளை அணிந்து செல்வதனை தவிர்த்து கொள்ளுமாறும் , பேருந்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பயணிப்பவர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.