வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்
இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான அரச வெசாக் விழாவை மாத்தளை (Matale) தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெசாக் வாரத்தின் ஆரம்ப நிகழ்வு பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardena) தலைமையில் இன்று (21.05.2024) ஆரம்பமாகவுள்ளது.
வெசாக் பண்டிகை
அத்துடன் வெசாக் காலத்தில் தேவையற்ற விழாக்களை நடத்துவதை தவிர்க்குமாறு புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickremanayake) தெரிவித்துள்ளார்.
வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், பொலிஸாருக்கு மேலதிகமாக, ஆயுதப் படைகளின் ஆதரவையும் அவர்கள் பெறுவார்கள் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டி.ஐ.ஜி சட்டத்தரணி நிஹால் தல்துவ (Nihal Thalduwa) கூறியுள்ளார்.